தித்திக்கும் காலைப் பொழுது
எத்திக்கும் பனிப் போர்வை
நுனிப் புல்லின் தூயத் துளி
தேகம் வருடும் மென்தென்றல்
சிலிர்க்க வைக்கும் குளிர்
இயந்திரத் தனமில்லா
இயற்கையின் சத்தங்கள்.
சத்தம் எனினும் இன்னிசை
எனின் மிக்கத் தகும்.
இந்த இனிய சுகந்தம்
நாளும் அனுபவிக்க...
ஆதவனோடு போட்டி போட்டு எழ
உறுதிமொழி பல எடுத்தும்
அலாரம் அடித்தும் போர்வையில் புதையும்
சோம்பேறித் தனமே இறுதியில் வெல்கிறது.
என் செய்வேன்? :(
Wednesday, September 3, 2008
ஒரு Trekking பயணத்தில்....
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 9/03/2008 07:16:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//என் செய்வேன்? :(//
இழுத்து போர்த்திகிட்டு தூங்க வேண்டியதுதான் :)
Post a Comment