Sunday, July 26, 2009

நம் காதலைப் பகிர்ந்து
நாம் இருவரும் மீண்டும்
புதிதாய்ப் பிறந்த அந்நாளை
ஏன் நம் இருவருக்கும் பொதுவான
பிறந்த நாளாய்க் கொண்டாடக் கூடாது?

நம் பிரிதலின்
கடைசிச் சந்திப்பில்
ஈரமாயின
உதடுகளும், கண்களும்.