Thursday, June 25, 2009

குறுஞ்செய்தி வாயிலாக ஒரு கதை

SMS

10.05 PM
இன்னுமா இன்ட்டர்வ்யூ முடியல? இப்ப எங்க இருக்கிற?

10.08
கொஞ்சம் நேரம் முன்னாடி தான் முடிஞ்சது... இப்ப சாப்டுட்டு இருக்கிறேன். பஸ் ஏறினதும் உனக்கு கால் பண்றேன்

10.09
'எப்படி பண்ணின இன்ட்டர்வ்யூ? பஸ் ஏறினதுக்கு அப்புறம் சொல்லு.

10.27
இன்ட்டர்வ்யூ நல்லா பண்ணியிருக்கிறேன்...பாக்கலாம். பஸ்-ல இடம் கிடச்சிருச்சு. இங்க படம் போட்ருக்காங்க.ரொம்ப சத்தமா இருக்கு. பேசினாலும் கேக்காது. அம்மா கிட்ட சொல்லிடு. நாளைக்குக் காலைல பாக்கலாம்.

10.29
சரி சொல்லிடறேன்... என்ன படம்? டேய் அண்ணா!பக்கத்துல எதும் அழகான பொண்ணு இருக்குதா?

10.33
ஆமா... பக்கத்துலயே ஒரு அழகான பொண்ணு. முன்னாடி இன்னொரு பொண்ணு. உனக்கு இதுல எந்த பொண்ணு அண்ணியா வேணும் சொல்லு? நாளைக்கு காலைல
வரும்போது கூட்டிட்டு வந்துடறேன். ஏதோ ஒரு சரத்குமார் படம். பேர்லாம் தெரியல.

10.35
உதை வாங்காம வீடு வந்து சேரு. போனா போகுது...கொஞ்சம் சைட் வேணா அடிச்சிக்கோ :)

10.39
நீ வேற.. நான் சும்மா சொன்னேன்டி.. இங்க பஸ்ல ஒரு பொண்னு கூட இல்ல.... கிழடுகட்டைங்களா இருக்கு :( ...படமும் புடிக்கல. போர் அடிக்குது.

10.42
அப்ப நல்லா படுத்துத் தூங்கு... சொல்ல மறந்திட்டேன். பாக்யம் சித்தி இன்னைக்கு வந்திருந்தாங்க. உனக்கு ஏதொ பொண்னு பாத்து வெச்சிருக்காங்களாம். உனக்கு
வேலை கிடைச்சதும் கல்யாணம் தானாம் :)!

10.45
ஆமா.. சித்திக்கு வேற வேலை இல்ல. இப்பலாம் பண்ணிக்க முடியாது. முதல்ல உன் கல்யாணம்டி... ஒரு இரண்டு வருஷத்துக்கு அப்புறம் தான் என்னோடது எல்லாம்.

10.47
நானும் இப்பலாம் பண்ணிக்க முடியாது...சரி வேலை கிடைச்சா முதல் சம்பளத்துல எனக்கு என்ன வாங்கித் தருவ?

10.53
ஹலோ...'என்ன வாங்கித் தருவ'ன கேட்டதும் சத்தத்தையே காணும்?

10.56
டேய்...தூங்கிட்டியா? ம்ம்...நாளைக்குப் பாக்கலாம். குட் நைட்....


11.00
(மற்றொரு பேருந்திலிருந்து யாரோ ஒருவர் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்புகிறார்)

'மச்சான் இங்க ஒரு பஸ் பள்ளத்துல கவுந்து கிடக்குடா. நிறைய கூட்டம் கூடியிருக்கு. ஆனா எங்க பஸ் நிறுத்தாம வந்துட்டான். எப்படியும் அஞ்சாறு பேராவது
காலியாயிருப்பாங்கடா'

5 comments:

ஒளியவன் said...

நான் பிரம்மிச்சுட்டேன் சுரேஷ். இப்படி ஒரு அட்டகாசமான படைப்பை உன்னிடமிருந்து பார்த்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லையெனிலும், நான் பாராட்டியே ஆகவேண்டும். உனது வித்தியாசமான முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்!

ஒளியவன் said...

என்னால திரும்பவும் அதை வாசிக்காம இருக்க முடியலை. திரும்பவும் வாசிச்சுட்டேன். உன் பதிவை சுட்டி (உன் ப்ளாகர் முகவரியோட, உன் பேரைச் சொல்லி...) என் நண்பர்களுடன் இன்றைய இலக்கியப் பகிர்வுல பகிர்ந்துகிட்டேன். சுரேஷ்! கதை வெகு அருமையா இருக்குடா! வாழ்த்துகள்!

ஒளியவன் said...

"உன் பதிவை சுட்டி" அல்ல "உன் பதிவை சுட்டு"

Suresh K said...

மிக்க மிக்க நன்றி நண்பா!! உன் முன்னாடி எல்லாம் நான் ஒண்ணுமே இல்லடா...இது உன்னோட பெருந்தன்மைய தான் காட்டுது!!!

rithu parnan said...

Tamizhilil en Brahmmippai pathivu seyyathan Virupam!

Tamil vadiva ezhuthukal(FONT) illatha Kaniniyin Thayakam!

Irundhalum...Nanban Sureshin Muyarichigalai Vazhtha udhaviya Aangila ezhutukalluku Tamizh Vanakkam!!