முன்பொருமுறை முயன்றது போல் ஓரிரு வரிகளில் கதை சொல்ல முயன்று பார்த்தேன் மறுபடியும். 'Science Fiction' கதைகளே எனக்குப் பெரும்பாலும் தோன்றுகிறது :-( .
1.தலைப்பு: கி.பி. 3292
ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
"இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு - ' நீராவி எஞ்சின்' "
2. தலைப்பு: பூமியை நெருங்கும் ஒரு விண்கலத்தினுள்....
"இந்த கிரக வாசிகளைப் பார், வித்தியாசமாய் இருக்கிறார்கள்! ஒரேயொரு சிறிய தலையுடன், இரண்டே கைகளுடன் நம் உள்ளங்கை அளவில் இருக்கிறார்கள். "
3. தலைப்பு: அவன்-அவள் மாற்றம்
மகனின் பதினாலாவது பிறந்த நாளுக்கு தந்தை ஆசையாய் இரண்டு சட்டைகள் வாங்கி வந்தார். மகனோ கண்ணாடி முன் தனிமையில் அக்காவின் உடைகளை அணிந்தபடி.
4. தலைப்பு: இயந்திரம் + மனிதன்
உடம்பில் வெடிமருந்துகள் கட்டிக்கொண்டு கூட்டத்தில் சந்தேகம் ஏற்படாதவாறு நுழைந்தான் அவன். கணினியில் அவனுக்கு கட்டளைகள் பிறப்பித்தவாறு அந்த இயக்கத்தின் 'அறிவியல் பிரிவு' வல்லுனர்கள்.
1 comments:
nalla muyarchi.......... :)
Post a Comment